tubetranscript.io

Food and food · Transcript · · Updated

ஹோட்டலுக்கு போக கிளம்பின மாமியாருக்கு மருமகள் கொடுத்த சுவையான surprise! 🍛❤️ #tamilshorts – Transcript

Video by Food and food · Watch the original on YouTube

Video thumbnail: ஹோட்டலுக்கு போக கிளம்பின மாமியாருக்கு மருமகள் கொடுத்த சுவையான surprise! 🍛❤️ #tamilshorts
Source video on YouTube · Transcript generated automatically and may contain errors.

Use this video with Pro

Reading, copying and transcript downloads are free. Create saved AI results for this video with a signed-in Pro account ($9/month).

Transcript

Search ignores accents. All transcript text stays visible.

அம்மா இந்த வெயில்ல எங்க கிளம்புறீங்க? >> கொஞ்சம் கடைக்கு போயிட்டு வரோம்மா. சீக்கிரம் வந்துருவோம். >> அம்மா சாப்பிட்டுட்டு போங்க. வெறும் வயித்தோட போகாதீங்க. >> வேண்டாம்மா. போற வழியில ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறோம்.

>> ஹோட்டல் சாப்பாடு அடிக்கடி உடம்புக்கு நல்லது இல்லம்மா. இருங்க. ஹோட்டல் மாதிரியே வீட்டுலேயே செஞ்சு தரேன். >> அம்மா. >> இன்னைக்கு ஹோட்டல் வேண்டாம். இங்கேயே சாப்பிடலாம். >> சரிப்பா பாக்கலாம் இவ என்ன செய்யறான்னு.

முதல்ல டிக்கா மேரினேட் செய்யணும் அம்மா. தயிறு, இஞ்சி பூண்டு, மிளகாய ்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்குறேன். கடலை மாவு சேர்த்தா மேரினேடு கெட்டியா இருக்கும். மசாலா பன்னீர்ல நல்லா ஒட்டிக்கும். ஓ இதுக்குதான் கடலை மாவா?

பன்னீரை உடையாம மெதுவா பிசரி மூடி வச்சு 30 நிமிஷம் ஊற விடணும்மா. >> இன்னும் சமைக்கவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள வாசனை வருதே. >> நான் சொல்லலமா பாருங்க.

தவா நல்லா சூடானதும் பன்னீரை போடணும். அப்பதான் வெளிய பொன்னிறமா உள்ள மிருதுவா இருக்கும். ஓரத்துல கொஞ்சம் கருகினாதான் உண்மையான டிக்கா சுவை. இதுதான் ஹோட்டல் ரகசியம். அடடா பார்க்கவே அழகா இருக்கு.

இப்ப கிரேவி செய்யலாம். வெண்ணெயில சீரகம் பொரிய விட்டு வெங்காயத்தை கோல்டன் பிரவுன் வரைக்கும் வதக்கணும். தக்காளி பியூரைய ஊத்தி மசாலா தூள் சேர்த்து எண்ணெய் பிரிஞ்சு வர வரைக்கும் கிளறனா மசாலா ரெடி.

இப்போ தண்ணி உப்பு சேர்த்து கொதிக்க விடணும். அப்புறம் ஃிளேம் குறைச்சு ஏழு நிமிஷம் சிம்மர் பண்ணனும். சப்பாத்தி மாவுக்கு வெந்நீர் ஊத்தி பிசைஞ்சா மென்மையா வரும்மா. பிசைஞ்சு ஈரத்ததுணியால மூடி 15 நிமிஷம் ஊற விடணும். உருண்டையை மாவுல தோச்சு தேய்ச்சா ஒட்டாதம்மா. ரொம்ப தடிமனும் இல்லாம ரொம்ப மெல்லிசும் இல்லாம சமமா தேய்க்கணும். இவ தேய்க்கிறது வட்டமா அழகா வருதே.

>> பாருங்கம்மாஃிளேம்ல காட்டுனதும் எப்படி உப்பிடிச்சு கடைசியா கொஞ்சம் நெய் தடவுனா சப்பாத்தி மிருதுவா மணமா இருக்கும். >> அடேங்கப்பா ஹோட்டல் சப்பாத்தி மாதிரியே இருக்கே >> நிறமே அட்டகாசமா இருக்குமா. இப்படி நிறம் நான் சமைச்சும் வந்தது இல்லை. நீங்க கத்து கொடுத்த பக்குவம்தான் அம்மா.

கஸ்தூரி மேத்தியை கையால நசுக்கி போட்டு கடைசியா கிரீம் சேர்த்தா ஹோட்டல் டேஸ்ட் வந்துரும். டிக்காவை கிரேவியில போட்டு உடையாம மெதுவா கலக்கணும். ரெண்டு நிமிஷம் ஊறனா மசாலா பன்னீருக்குள்ள இறங்கும்.

பன்னீர் திக்கா மசாலா ரெடி அம்மா கூட சூடான சப்பாத்தியும் இருக்கு. வாங்க சாப்பிடலாம். சூப்பரா இருக்குமா ஹோட்டல்லயே இவ்வளவு சுவை இல்லை பன்னீர் வெண்ணை மாதிரி மிருதுவா இருக்கு. நீ சொன்னது சரிதாமா.

வீட்டு சாப்பாடுதான் உடம்புக்கும் மனசுக்கும் நல்லது. >> உன் கைப்பக்குவம் ஹோட்டல்ல மிஞ்சிடுச்சு. >> இந்த ரெசிபி புடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க. ரெசிபி வேணும்னா கமெண்ட்ல ரெசிபின்னு போடுங்க. இல்லைனா ரெட் ஹார்ட் போடுங்க. நான் சென்ட் பண்றேன். இதுபோன்ற குடும்ப சமையல் கதைகளுக்கு லைக் ஷேர் சப்ஸ்கிரைப் பண்ணுங்க. நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Frequently asked questions

கடலை மாவு சேர்த்தால் மேரினேடு கெட்டியாக இருக்கும் மற்றும் மசாலா பன்னீரில் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.

பன்னீர் திக்கா மசாலாவுடன் சூடான சப்பாத்தியும் சேர்த்து பரிமாறப்பட்டது.